அடுத்த ஆறு மாதங்களில், எமது நாட்டுக்கு மில்லியன் கணக்கான அலகுகள் கொண்ட மருந்துகள் மற்றும் உபகரணங்கள் தேவைப்படும். இதோ Elixir ஐ அறிமுகப்படுத்துகிறோம். உங்களால் எவ்வாறு உதவ முடியும் எனப் பாருங்கள்.
ஆக்கம் :யுதஞ்சய விஜேரத்ன பங்களிப்பு : அன்வர் ஹம்தானி, சுகாதார அமைச்சு, காவிந்தியா தென்னக்கோன், சர்வோதயா, ஹெலனி கல்பயா (LIRNEasia) மொழிபெயர்ப்பு : மொகமட் பைரூஸ் & நிஷாதி குணதிலக்க
இலங்கை மருந்துப் பொருட்கள் மற்றும் உபகரணங்களுக்கான கடுமையான பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவ ஊழியர்கள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) போன்ற தொழிற்சங்கங்கள் மற்றும் சர்வதேச செய்தி நிறுவனங்கள் கூட இதைப் பறைசாற்றி வருகின்றன. இந்த நெருக்கடிக்கான காரணம் எளிதானது: இலங்கை சுகாதார கட்டமைப்பினால் பயன்படுத்தப்படும் மருந்துகளில் பெரும்பாலானவை வேறு நாடுகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. தவறான தேசிய பொருளாதார முகாமைத்துவம், மருத்துவமனைகளுக்குத் தேவையானவற்றைக் கொள்வனது செய்வதில் கூட சிரமத்தை தோற்றுவித்துள்ளது. இந்த நெருக்கடி குறித்து நாம் இங்கு விபரிக்கப் போகிறோம், அத்துடன் இந்த இக்கட்டான தருணத்தில் நீங்கள் எப்படி உதவலாம் என்பதற்கான ஐந்து தெரிவுகளையும் உங்களுக்கு வழங்குகிறோம்.
- சரி, நமக்கு என்ன தேவை?
- நாம் எப்படி உதவலாம்?
- தெரிவு 1 : சுகாதார அமைச்சுக்கு நேரடியாக அன்பளிப்புச் செய்தல்
- தெரிவு 2 : சர்வோதயாவுக்கு நேரடியாக அன்பளிப்புச் செய்தல்
- காசோலைகள் மற்றும் பண கட்டளைகள் (இலங்கை மற்றும் அமெரிக்கா)
- PayPal (சர்வதேசம்)
- Wire transfers
- தெரிவு 3 : சர்வதேச நிதி திரட்டுனர்களுக்கு நன்கொடை வழங்குதல் *
- தெரிவு 4 : மருந்துப் பொருட்களை (உள்ளூரில்) கொள்வனவு செய்து சுகாதார அமைச்சுக்கு அனுப்புதல்
- தெரிவு 05 : மருந்துகளை (சர்வதேச ரீதியாக) கொள்வனவு செய்து சுகாதார அமைச்சுக்கு அனுப்புதல்
- இறுதி இணைப்பு - தெரிவு 01
- இறுதி இணைப்பு - தெரிவு 02
- அடிக்குறிப்புகள் :
- இந்த ஆக்கத்தின் காட்சிப்படுத்தல்களுக்கான தரவுகள்
சரி, நமக்கு என்ன தேவை?
இதற்காக ஒரு மென்பொருளை உருவாக்கியுள்ளோம். இது Elixir என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது தேசிய அளவிலும் வைத்தியசாலைகள் மட்டத்திலும் நிலவும் தேவைகளை ஒன்றுபடுத்திக் காண்பிக்கிறது.
தேசிய மட்டத்தைப் பொறுத்தவரை, சுகாதார அமைச்சின் சுகாதார நலன்களுக்கான நன்கொடை செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பாளரால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட தேவைகளின் பட்டியல் எம்மிடம் உள்ளது.
வைத்தியசாலை மட்டத்தைப் பொறுத்தவரை, நீங்கள் மேலே பார்க்கும் இடங்களிலிருந்து, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் உள்ள உள்ளூர் மருத்துவ ஊழியர்களிடமிருந்து நேரடியாக கிடைக்கப் பெற்ற தரவுகள் எம்மிடம் உள்ளன.
இந்த நேரத்தில் நிலவும் மிக அவசியமான தேவைகளின் விபரத்தை இங்கே பார்க்கலாம். சுகாதார அமைச்சின் அவசர தேவைப் பட்டியலில் 38 மருந்துகள் உள்ளன.
எமக்கு 17.5 மில்லியன் 200மிகி Sodium Valproate மாத்திரைகள் மிகவுமே தேவைப்படுகின்றன. Sodium Valproate கால்-கை வலிப்பு மற்றும் மன அழுத்த சிகிச்சைகளுக்குப் பயன்படுகிறது.
மேலும் எமக்கு 2.5 மில்லியன் Potassium Chloride மாத்திரைகள் தேவைப்படுகின்றன - குறைந்த பொட்டாசியம் அளவைக் கொண்டிருப்பவர்களைக் குணப்படுத்தப் பயன்படுகிறது, ஆனால் சில வகையான இதய அறுவை சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது மற்றும் இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகும் நோயாளர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
அடுத்து என்ன? Insulin நீரிழிவு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது, furosemide, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடலில் திரவம் தேக்கமடைதல், குறிப்பாக இதய செயலிழப்பு காரணமாக ஏற்படும் கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு உதவவும் பயன்படுகிறது.
Allopurinol முடக்குவாதம் மற்றும் சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகிறது. Noradrenaline இரத்த அழுத்தத்தை பராமரிக்க பயன்படுத்தப்படுகிறது. Enoxaparin இரத்தம் உறைவதைத் தடுக்க உதவுகிறது.
இது மிகவும் அவசரமான தேவையுடைய பட்டியல் மட்டுமே. அவசரமில்லாத மருந்துகள் உட்பட முழுப் பட்டியல் (படிக்க: இது தொடர்ந்தால் அவசரமாக தேவைப்படக்கூடிய விடயங்கள்) மேலும் 278 வகையான மருந்துகள் மற்றும் 112 வகையான உபகரணங்களின் பெயர்களைக் கொண்டுள்ளது. (வடிகுழாய்கள் முதல் IV பைகள் , உட்புற மூச்சுக்குழாய்கள் வரை அனைத்தும்).
எங்களுக்கு neo-natal endotracheal tubes கூட தேவை - இவை குழந்தைகள் சுவாசிப்பதற்கு உதவும் குழாய்கள்.
அடுத்த ஆறு மாதங்களில், நாட்டுக்கு மில்லியன் கணக்கான மருந்துகள் மற்றும் உபகரணங்களின் அலகுகள் தேவைப்படுகின்றன
elixir.watchdog.team இணைப்புக்குச் சென்று ஒவ்வொரு கோரிக்கையையும் பார்வையிடலாம்.
நீங்கள் ஒரு மருத்துவ அதிகாரி எனில், நீங்கள் பணிபுரியும் வைத்தியசாலையில் பற்றாக்குறை இருந்தால், நீங்கள் Elixir இல் புதிய கோரிக்கையை உருவாக்கலாம். நாம் அவற்றை மதிப்பாய்வு செய்து, உங்கள் தேவைகளை அனைவரும் பார்க்கும் வகையில் வெளியிடுவோம்.
இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய விடயம் என்னவெனில், Watchdog நன்கொடைகளைப் பெறுவதில்லை அத்துடன் இதற்கான ஏற்பாடுகளைக் கையாள்வதுமில்லை. நாம் ஒரு சிறிய அணியினர். எமது இலக்கு சமூகத்திற்கு பயனுள்ள தகவல்களை வழங்குவதே. மருத்துவ கட்டமைப்பு, பொது மக்கள் மற்றும் உதவி செய்யத் தயாராகவுள்ளவர்களை இணைப்பதற்கு நாம் கையாளும் வழிமுறையே இதுவாகும்.
ஆக, முக்கியமான எல்லாக் கேள்விகளுடனும் இதனை ஆரம்பிப்போம்.
நாம் எப்படி உதவலாம்?
நீங்கள் மருத்துவ கொள்வனவுகள் பற்றி நன்கு அறிந்திருக்கவில்லையெனில், முதலில் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இந்த மருந்துப் பொருட்களை ஒரு மருந்தகத்தில் இருந்து வாங்கி வைத்தியசாலையில் ஒப்படைக்க முடியாது.
நாம் முன்னர் குறிப்பிட்டது போல், நமக்குத் தேவையான பெரும்பகுதி இங்கு உற்பத்தி செய்யப்படவில்லை. Elixir இல் நாம் சேகரித்த தரவுகளின்படி, 9.2% மட்டுமே இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகிறது எனக் கூறலாம். மீதமுள்ளவை இந்தியா, சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, சைப்ரஸ், பங்களாதேஷ், இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் ஆர்ஜென்டினா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்தே வர வேண்டும்.
எனவே, தேவையான எண்ணிக்கைக்கு ஏற்ப, நீங்கள் செய்ய வேண்டியது:
1) ஒரே நேரத்தில் இலட்சக்கணக்கான டோஸ்களை வழங்கும் திறன் கொண்ட விநியோகஸ்தரிடமிருந்து பொருட்களைப் பெறுங்கள்.
2) அவற்றை இலங்கைக்கு அனுப்புங்கள்
3) சுங்கத்திலிருந்து விடுவிக்கவும். குறிப்பாக அவற்றில் பல கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களாக இருப்பதால், இந்த மருந்துகளின் ஏற்றுமதிகளை அனுமதிக்க முழு அளவிலான அனுமதிப்பத்திரம் தேவைப்படுகிறது, எடுத்துக்காட்டாக, கெட்டமைன் இந்த பட்டியலில் உள்ளது. இது ஒரு மயக்க மருந்தாகும். 4) நேரடியாக வைத்தியசாலைகளுக்கு அல்லது சுகாதார அமைச்சுக்கு வழங்கலாம்.
ஒருவேளை நீங்கள் புரிந்து கொள்ளக்கூடியது போல, இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள், தேவையான இயலுமைகள் மற்றும் அனுமதிகளைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் தூதரகங்களின் உதவிகள் உங்களுக்குத் தேவை.
எனவே இதுவிடயத்தில் நீங்கள் செய்யக்கூடியவற்றை, ஒப்பீட்டளவான சிரமங்களின் அடிப்படையில் தெரிவுகளாகப் பட்டியலிட்டுள்ளோம்.
நீங்கள் மேலும் கீழே செல்லச் செல்ல, செய்ய வேண்டிய ஏற்பாடுகள் மிகவும் சிக்கலானதாக இருக்கும், ஆனால் அந்த தெரிவுகளை செயற்படுத்த முடிந்தால், உங்களால் அதிக தாக்கத்தை விளைவிக்க முடியும்.
தெரிவு 1 : சுகாதார அமைச்சுக்கு நேரடியாக அன்பளிப்புச் செய்தல்
அன்பளிப்புச் செய்வதற்கான கோரிக்கையுடன் moh.covid.coordinator@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
ஆம், இந்த மின்னஞ்சல் ஒரு ஜிமெயில் கணக்குதான். இது அரசாங்க நிறுவனத்தின் மின்னஞ்சல் போல் விளங்கவில்லை என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் நாம் சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு அதனைச் சரிபார்த்துள்ளோம்;. இலங்கையின் சுகாதார அமைச்சின் கொவிட்-19 மற்றும் சுகாதார நலன் நன்கொடை நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானி இம் மின்னஞ்சலுக்கு மறுமுனையில் பதிலளிப்பார். பொதுவாக, இங்கு நாம் வங்கிக் கணக்குகளையும் குறிப்பிடுவோம். எனினும் இதற்கான வங்கிக் கணக்குகள் எதிர்வரும் நாட்களிலேயே தயார் செய்யப்படும் எனத் தெரிகிறது.
நீங்கள் கணிசமானளவு நன்கொடை வழங்கக்கூடிய நிலையில் இருக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக, முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைப் பட்டியல்களில் இருந்து ஒரு முழுமையான பகுதியை - அல்லது அதன் பெரிய பகுதியை – பெற்றுக் கொடுப்பது நல்லது. ஆயிரம் ரூபாவை நன்கொடையாக வழங்குவதற்கு மின்னஞ்சல் அனுப்புவது அனைவரின் நேரத்தையும் வீணடிக்கும்.
Elixir இல் பதிவேற்றுவதற்கான தரவுகளை சம்பந்தப்பட்டவர்கள் எங்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள், எனவே அவர்களின் தேவைகளை முடிந்தவரை நாம் இங்கு புதுப்பிப்போம்.
தெரிவு 2 : சர்வோதயாவுக்கு நேரடியாக அன்பளிப்புச் செய்தல்
சர்வோதயா இலங்கையில் உள்ள மிகப் பெரிய கீழ்மட்ட அமைப்புகளில் ஒன்றாகும். 1958 இல் ஏ.டி. ஆரியரத்ன அவர்களால் நிறுவப்பட்டது. 2006 இல் சர்வோதயா இலங்கையில் குறைந்தது 15,000 கிராமங்களை (38,000 இல்) தனது வலையமைப்பில் கொண்டிருந்தது. சுமார் 11 மில்லியன் மக்கள் சர்வோதயா திட்டங்களின் பயனாளிகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2004 சுனாமிக்குப் பிறகு இவ்வமைப்பு 1000 வீடுகளை நிர்மாணித்தது.
இது சர்வோதயாவுக்கான விளம்பரம் அல்ல, நாங்கள் ஏன் அவர்களைப் பரிந்துரைக்கிறோம் என்பதற்கான விளக்கமே இது. இந்தப் பணிகளை முன்னெடுக்கக் கூடியவர்கள் என நாம் காணும் ஒரே அரச சார்பற்ற அமைப்பு இதுதான். ஏனெனில்
அ) நாம் இங்கு எதிர்பார்க்கும் அளவிலான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் இயலுமையை அவர்கள் கொண்டுள்ளனர்.
ஆ) தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் வசதி அவர்களிடமுள்ளது.
நாம் அவர்களைத் தொடர்பு கொண்டு, மருத்துவ விநியோகத்தில் நேரடியாக ஈடுபடும் அவர்களது ஊழியர்கள் மூலமாக செயற்பாட்டு நடைமுறைகளை சரிபார்க்கிறோம். அவர்கள் நாடு முழுவதும் 25 மாவட்ட நிலையங்களை நடாத்துவதுடன் நாடெங்குமுள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையானவற்றை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளையும் கொண்டுள்ளனர். அவர்கள் எமக்கு Elixir இல் தரவுகளை பதிவேற்றுவதற்கும் உதவுகிறார்கள்.
அவர்களுக்கு அன்பளிப்புச் செய்வதற்கு மூன்று வழிகள் உள்ளன :
காசோலைகள் மற்றும் பண கட்டளைகள் (இலங்கை மற்றும் அமெரிக்கா)
இலங்கையில் நீங்கள் காசோலைகளை பதிவுத் தபாலில் அனுப்பலாம் அல்லது நேரில் கையளிக்கலாம் :
- சர்வோதயா தலைமையகம், இல 98, ரவத்தவத்த வீதி, மொரட்டுவ.
அமெரிக்காவில் நீங்கள் காசோலையை இங்கு அனுப்பலாம் :
- Sarvodaya USA, 1127 University Ave, Madison, WI 53715 USA. Sarvodaya USA ஒரு 501(c)3 வரி விலக்களிக்கப்பட்ட அரச சார்பற்ற நிறுவனமாகும்.
இரு இடங்களிலும் உங்கள் நன்கொடைகளுக்கான பற்றுச்சீட்டு வழங்கப்படும்.
PayPal (சர்வதேசம்)
இந்த இணைப்பில் https://sarvodayausa.org/donations/donate/ வழங்கலாம். நிதி அமெரிக்க சர்வோதயாவுக்கு கிடைக்கும். அங்கிருந்து சர்வோதயா பயன்படுத்தலாம்.
Wire transfers
உள்ளூர் நன்கொடைகளை அனுப்ப :
Commercial Bank of Ceylon PLC Bank Account: 2590026974 Currency : LKR Bank Address: No.766, Galle Road, Idama, Moratuwa, Sri Lanka. Swift Code : CCEYLKLXXXX
வெளிநாட்டு நாணய நன்கொடைகளை அனுப்ப:
Commercial Bank of Ceylon PLC Bank Account: 1590008015 Currency : USD Bank Address: No.766, Galle Road, Idama, Moratuwa, Sri Lanka. Swift Code : CCEYLKLXXXX
11 மார்ச் 2022 நிலைவரப்படி, நாட்டிற்கு வரும் அனைத்து வெளிநாட்டு நாணயங்களும், மிக வேகமாகப் பயன்படுத்தப்படாவிட்டால், ரூபாயாக மாற்றப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். (பார்க்க Gazette 2270/66, Repatriation of Export Proceeds into Sri Lanka) இது இலங்கைக்குள் இருந்து அமெரிக்க டொலரில் பொருட்களை வாங்குவதை மிகவும் கடினமாக்குகிறது, எனவே இது உகந்த தெரிவாக இருக்காது.
தெரிவு 3 : சர்வதேச நிதி திரட்டுனர்களுக்கு நன்கொடை வழங்குதல் *
*அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிந்தவர்களிடமிருந்து
நிதி திரட்டுதல் என்பது இன்றைய நிலையில் கடினமான ஒரு விவகாரம். 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின்போது இன்ஸ்டாகிராம் பிரபல்யம் ஒருவர் சம்பந்தப்பட்ட பரவலாக அறியப்பட்ட மோசடி, இணையவழி நிதி திரட்டுபவர்கள் மீதான நம்பிக்கையை கடுமையாக பாதித்தது.
இரண்டாவதாக, மருந்துகளைப் பெறுவதில் சிரமம் உள்ளது, இந்த செயல்முறைக்கு அதிகாரிகள் மற்றும் தீவிரமான ஏற்பாட்டியல்களின் அனுமதி தேவைப்படுகிறது.
எனவே, எச்சரிக்கையாக இருப்பது பொருத்தமானது : இந்த சர்வதேச நிதி திரட்டுபவர்கள் எவரும் உங்களது பணத்தை எடுத்துக் கொண்டு தலைமறைவாகமாட்டார்கள் என Watchdog உத்தரவாதம் அளிக்காது. எங்களால் சொல்ல முடிந்தவரை, அவை முறையானவை, ஆனால் உள்ளூர் நிறுவனங்களைச் சரிபார்க்கும் அளவிற்கு இந்த நிதி திரட்டுபவர்களை எங்களால் சரிபார்க்க முடியாது, இது விடயத்தில் நீங்கள் பணத்தை இழந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
அந்த வகையில் :
- மது செல்வகுமாரின் GoFundMe நிதி திரட்டல், பிரித்தானியாவை தளமாகக் கொண்டது. இலங்கை குழந்தை நல மருத்துவர்கள் கல்லூரி (Sri Lanka College of Paediatricians), பெரினாடல் சொசைட்டி ஆஃப் ஸ்ரீலங்கா (Perinatal Society of Sri Lanka) மற்றும் அனஸ்தீசியாலஜிஸ்ட்ஸ் மற்றும் இன்டென்சிவிஸ்ட்ஸ் கல்லூரிக்கு (College of Anaesthesiologists and Intensivists) நேரடியாக பணத்தை நன்கொடையாக வழங்குகிறது.
- tmc.gov.in. ஊடாக டாட்டா ஞாபகார்த்த நிலைத்தின் (இந்தியா) நிதி திரட்டல். இதில் நன்கொடை வழங்க அவர்களது இணையத்தளத்திற்குச் சென்று ‘நோயாளர் நலன்’ பகுதியின் கீழ் செல்லவும். பின்னர் ஒரு குறிப்புடன் fundraising@tmc.gov.in இற்கு ncg@tmc.gov.in எனும் முகவரிக்கு பிரதியிட்டு மின்னஞ்சல் அனுப்பவும். அதில் இலங்கை நலன்புரிக்கான நன்கொடை எனக் குறிப்பிடவும்.
தெரிவு 4 : மருந்துப் பொருட்களை (உள்ளூரில்) கொள்வனவு செய்து சுகாதார அமைச்சுக்கு அனுப்புதல்
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (NMRA) உள்ளது என்பதை நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இவ் ஆணைக்குழு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், உணவுகள், மருத்துவ சாதனங்கள் அல்லது அழகுசாதனப் பொருட்களுடன் மருந்துகளின் ஒருங்கிணைந்த பண்புகளைக் கொண்ட தயாரிப்புகள் (borderline products), மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகின்றது. மேலும் மருந்துகள் தேவையான தரங்களைக் கொண்டுள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றது. NMRA இனால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை இறக்குமதி செய்ய தகுதியுடையயவை என NMRA கருதும் நிறுவனங்களிடமிருந்து நீங்கள் மருந்துகளைப் பெற வேண்டும்.
இந்த விடயத்தில் Elixir ஓரளவு உதவுகிறது.
1) elixir.watchdog.team இணையத்தளத்திற்குச் சென்று தேவைக் கோரிக்கைகளை பார்வையிடுங்கள்
கோரிக்கைகள் உள்ளிடப்படும் போது, Elixir , NMRA இன் அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளர்கள் பட்டியலை ஸ்கேன் செய்து, அந்த மருந்துக்கான அனைத்து உள்ளூர் இறக்குமதியாளர்களையும் கண்டறியும்.
இது பெயர், வகை மற்றும் மருந்தின் அளவுக்கு மிக நெருக்கமான பொருத்தத்தைத் தேடும் - எடுத்துக்காட்டாக, இது'Vecuronium Bromide Inj. 10mgvial’ என்பதை வாசிக்கும். 10mg குப்பிகள், NMRA பட்டியலில் கிடைக்கவில்லை என்றால் Vecuronium bromide in 4mg/2ml குப்பிகளைப் பெறக் கூடிய விநியோகஸ்தரை உங்களுக்கு காண்பிக்கும். இது மருந்துகளுக்கான உள்ளூர் இறக்குமதியாளர்கள் யார் என்பதைக் கண்டறிய உங்களை அனுமதிக்கிறது.
2) Elixir இல் உறுதிமொழியைச் சேர்க்கவும். ’உறுதிமொழிகள்’ (Pledges) என்பது ஒரு கோரிக்கையை நீங்கள் கவனித்துக்கொள்வீர்கள் என்று மக்களிடம் கூறுவதற்கான எளிதான வழியாகும். உறுதியளிக்க, ஏதேனும் கோரிக்கைக்குச் சென்று, ‘Add to pledge’ என்பதைக் கிளிக் செய்யவும். (இதை நீங்கள் ‘எனது உறுதிமொழி’ ‘My Pledge’ பிரிவில் அணுகலாம். உங்கள் விபரங்களை பூர்த்தி செய்யவும், உங்கள் உறுதிமொழி பதிவு செய்யப்படும்.
இது Elixir பயன்படுத்துபவர்கள் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதைக் கண்டறிய உதவுகிறது. எடுத்துக்காட்டாக, உங்களால் ஒரு குறிப்பிட்ட மாத்திரையில் ஒரு குறிப்பிட்ட தொகையை விநியோகிக்க முடிந்தால், Elixir ஐப் பயன்படுத்தும் ஏனைய நன்கொடையாளர்கள் (மற்றும் சர்வோதயா போன்ற நிறுவனங்கள்) அதைப் பார்த்து, அவர்கள் அதை விடுத்து வேறு மருந்துகளை வாங்குவதற்கு முடியும். எனவே இதன் மூலம் அளவுக்கதிகமான மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு வீணாக்கப்படுவதை தவிர்க்க முடியும்.
3) இறக்குமதியாளர்களைத் தொடர்புகொண்டு, மருந்துகளை பொருட்களாக நன்கொடையாக (consignment) வழங்குவதற்கு பணம் செலுத்துங்கள். இவற்றைப் பெற்றுக் கொள்பவரின் முகவரி : செயலாளர், சுகாதார அமைச்சு, 385, வண. பத்தேகம விமலவன்ச மாவத்தை, கொழும்பு 10 4) அடுத்து, மருந்துகளை பொருட்களாக வழங்குவதற்கான விபரங்களை moh.covid.coordinator@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளைப் பார்வையிட்ட வகையில், குறைந்தபட்சம் பின்வருவனவற்றை உள்ளடக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம்:
- உற்பத்திப் பொருளின் பெயர், எண்ணிக்கை மற்றும் உற்பத்தியாளர் (முடியும் எனில்) மற்றும் நீங்கள் அனுப்பும் விநியோகஸ்தரின் விபரங்களைக் குறிக்கும் கடிதம்.
- ப்ரோஃபோர்மா (pro forma) அல்லது வர்த்தக விலைப்பட்டியல் - உங்கள் கடிதத்தில் விலைப்பட்டியல் இலக்கம் மற்றும் அண்ணளவான பெறுமதியைச் சேர்க்கவும்.
- பொருட்களின் பெயர், எண்ணிக்கை உட்பட, மருந்துப் பொருட்களின் வெளிப்புற லேபிளின் ஸ்கேன் செய்யப்பட்ட படம்.
தெரிவு 05 : மருந்துகளை (சர்வதேச ரீதியாக) கொள்வனவு செய்து சுகாதார அமைச்சுக்கு அனுப்புதல்
நீங்கள் இந்த வழிமுறையைத் தெரிவு செய்கிறீர்கள் என்றால், நீங்கள் சில விடயங்களை வரிசையாக மேற்கொண்டிருக்க வேண்டும் :
1) elixir.watchdog.team இல் உள்ள பட்டியலைப் பார்த்து, தேவையான மருந்துகளுக்கு கொடுக்கப்பட்ட நாட்டில் உள்ள விநியோகஸ்தர்களை அடையாளம் காணக்கூடிய மருத்துவர்கள்/மருந்தாளர்கள்/மருத்துவப் பணியாளர்கள். US FDA, EMA, MHRA அல்லது TGA Australia போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்குமுறை அமைப்புகளால் பதிவு செய்யப்பட்ட மருந்து உற்பத்திகளைப் பெற முயற்சிக்குமாறு NMRA பரிந்துரைக்கிறது.
2) இந்த விநியோகஸ்தர்களுக்கு பணம் செலுத்தி பொருட்களைப் பெறுவதற்கான இயலுமை
3) இந்த மருந்துகளை பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான வழிகளில் இலங்கைக்கு அனுப்பக்கூடிய நிறுவனங்கள்.
4) தூதரகங்களுக்கு இடையிலான இணைப்புகள். இலங்கைத் தூதரகத்தின் உறுதியான தொடர்பாடல் புள்ளி அல்லது உங்கள் நாட்டிலிருந்து இங்கு செயல்படும் தூதரகம். பொறுப்புத் துறப்பு: இதனை உத்தியோகபூர்வ ஆலோசனையாக நீங்கள் கருத முடியாது, ஆனால் நன்கொடைச் சங்கிலியின் பல்வேறு புள்ளிகளில் உள்ளவர்களுடன் உரையாடியதிலிருந்து நாங்கள் புரிந்துகொண்டவையே இவை.
5) இறுதி இணைப்பு. இறுதி இணைப்பு என்பதன் மூலம், சுங்கச்சாவடிகள் ஊடாக இந்த மருந்துகளைப் பெறக்கூடிய மற்றும் சுகாதார அமைச்சிற்கு மருந்துப் பொருட்களை இறுதியாகக் கொண்டு சென்று ஒப்படைக்கக்கூடிய நபர்களை நாங்கள் குறிக்கிறோம்.
இறுதி இணைப்பு - தெரிவு 01
சர்வோதயாவைத் தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் NMRA மற்றும் சுங்க அனுமதிகளைப் பெற உங்களுடன் தொடர்பு கொள்வர். அத்துடன் வைத்தியசாலைகளுக்கு விநியோகிப்பதற்கு சுகாதார அமைச்சுடன் ஒருங்கிணைப்பை மேற்கொள்வர்.
இதற்காக மனு திசேராவை Manu_tissera@yahoo.com என்ற மின்னஞ்சல் அல்லது சர்வோதயாவின் பிரதான அலுவலகத்தின் +94 11 264-7159 தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ளுங்கள். ( முகவரி : இலங்கை தேசிய சர்வோதய ஷ்ரமதான சங்கம், இல 98, ரவதாவத்தை வீதி, மொரட்டுவ, இலங்கை)
இறுதி இணைப்பு - தெரிவு 02
உங்கள் சொந்த உள்ளூர் வலையமைப்புடன் பணியாற்றுங்கள். மருத்துவப் பொருட்களின் நன்கொடைகளுக்கு அனுமதி வழங்க NMRA க்கு பின்வரும் ஆவணங்கள் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்:
- உற்பத்திப் பொருளின் பெயர், எண்ணிக்கை மற்றும் உற்பத்தியாளர் (முடியும் எனில்) மற்றும் நீங்கள் அனுப்பும் விநியோகஸ்தரின் விபரங்களைக் குறிக்கும் கடிதம்.
- ப்ரோஃபோர்மா அல்லது வர்த்தக விலைப்பட்டியல் - உங்கள் கடிதத்தில் விலைப்பட்டியல் இலக்கம் மற்றும் அண்ணளவான பெறுமதியைக் குறிப்பிடவும்.
- பொருட்களின் பெயர், எண்ணிக்கை உட்பட, மருந்துப் பொருட்களின் வெளிப்புற லேபிளின் ஸ்கேன் செய்யப்பட்ட படம்.
மீதமுள்ள செயல்முறை மேலே உள்ள உள்ளூர் நன்கொடையாளர்களுக்குரியதைப் போன்றே உள்ளது: கோரிக்கைகளைச் சரிபார்க்கவும், Elixir இல் உள்ள உறுதிமொழி எடுப்பதற்கான கோரிக்கைகளிலிருந்து உருப்படிகளைச் சேர்க்கவும், இதன் மூலம் நீங்கள் கோரிக்கைளின் ஒரு தொகுதியை கவனித்துக்கொள்வதை பிறர் அறிந்து கொள்ள முடியும்.
நீங்கள் பொருட்களை அனுப்ப வேண்டிய, பொருட்களைப் பெற்றுக் கொள்பவரின் முகவரியும் ஒன்றுதான்:
செயலாளர், சுகாதார அமைச்சு, 385, வண. பத்தேகம விமலவன்ச மாவத்தை, கொழும்பு 10
NMRA அனுமதி தொடர்பான விசாரணைகளுக்கு, Dr சவீன் சமகே, CEO, NMRA அவர்களை 0710818548 எனும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளலாம். ஆவணங்கள் மற்றும் கோரிக்கைகளை dg@nmra.gov.lk எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.
நீங்கள் மருத்துவர்களைக் கொண்ட குழுவின் ஒரு பகுதியாக இருந்தால், நிச்சயமாக பிந்தைய விருப்பங்களைக் கவனியுங்கள்; இல்லையெனில், முதல் மூன்றைத் தெரிவு செய்ய பரிந்துரைக்கிறோம். மேலே நாங்கள் பரிந்துரைத்த (கோரிக்கை செய்தல், உறுதிமொழி எடுத்தல்) எதைச் செய்வது என்பது குறித்து உங்களுக்கு மேலதிக உதவி தேவைப்பட்டால், உங்களுக்கு உதவ நாங்கள் உருவாக்கிய ஒரு சிறிய வீடியோ இங்கே:
அடிக்குறிப்புகள் :
நமது தேசிய சுகாதார கட்டமைப்பு அனைத்து பிரஜைகளுக்கும் இலவசமாக வழங்கப்படும் பொதுச் சேவையாகும். அரசாங்க செலவினங்களில் ஒப்பீட்டளவில் சிறிய பகுதியை மட்டுமே பயன்படுத்தி, இலங்கையின் சுகாதார குறிகாட்டிகளை அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய மட்டத்தில் வைத்துள்ளது. நாட்டில் என்ன அரசியல் நெருக்கடி ஏற்பட்டாலும், மருத்துவ ஊழியர்கள் பல தசாப்தங்களாக உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர்.
ஏன்? எப்படி? இவ்வாறு நடந்தது என்ற சில கேள்விகள் தொடர்ந்து எழுகின்றன. இப்படி நடப்பதை யாரும் அறியவில்லையா? நாம் உண்மையில் விடயங்களை இவ்வளவு தூரம் செல்ல அனுமதித்தோமா?
இவற்றுக்கு தற்போது எங்களிடம் பதில் இல்லை. அல்லது இந்தக் கேள்விகளுக்கு விடை காணும் ஆற்றல் நம்மிடம் இல்லை. மின்சாரம் முதல் சுகாதாரம் வரையிலான கட்டமைப்புகள் செயலிழந்த ஒரு அமைப்பினுள் நாம் வாழ்கிறோம். கடினமான கேள்விகளை பிறகு கேட்போம். நமது நலனைக் கவனித்துக் கொள்ளும் இந்த சுகாதார கட்டமைப்பைக் கவனித்துக் கொள்ள இப்போது நம் அனைவரையும் ஒன்றிணைப்பதே உடனடித் தேவை.
தேவைப்படும் வரை Elixir செயலில் இருக்கும்.
உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். நாமும் எங்களால் முடிந்ததைச் செய்வோம்.
இந்த ஆக்கத்தின் காட்சிப்படுத்தல்களுக்கான தரவுகள்
Generic Name | Brand Name | Importer | Quantity |
---|---|---|---|
Sodium nitroprusside Inj. 50mg
Sodium Nitroprusside for Injection BP/USP 50mg | 200 | ||
Cholecalciferol tablet 5000 IU (Colecalciferol)
Colecalciferol Tablet BP 5000 IU | 50000 | ||
Total Parenteral Nutrition in500ml ¿1,500ml collapsible bag
Total Parenteral Nutrition in 500ml-1,500ml multiple component in collapsible bag (central or peripheral) | 6250 | ||
Desferrioxamine Inj. 500mg
DESFERRIOXAMINE MESYLATE FOR INJECTION USP 500MG | DEMOFERIDONE | Access International (Pvt) Ltd | 112500 |
Calcium polystyrene sulphonate15g-17g powder sachet
CALCIUM POLYSTYRENE SULPHONATE POWDER 15G SACHETS | K-STRYN | George Steuart Health (Pvt) Ltd | 30000 |
Filgrastim Inj 300mcg in0.5ml/1ml, PFS/vial
FILGRASTIM INJECTION 300MCG IN 1ML | NEUTROMAX | Slim Pharmaceuticals (Pvt) Ltd | 42500 |
Potassium Chloride Tab. 600mg
POTASSIUM CHLORIDE EXTENDED RELEASE 600MG | ALKAY ER | Kamazu (Pvt) Ltd | 2500000 |
Pethidine hydrochloride Inj.75mg
PETHIDINE INJECTION B.P 75MG/ 1.5ML | VERPAT 75 | Leader Pharma Agency (Pvt) Ltd | 45000 |
Morphinesul.Inj.(Presvat.free) 2mg/2ml
Morphine Sulphate injection BP,(preservative free) 2mg in 2ml | 1050 | ||
Potassium chloride Injection 15 % in 10ml Ampoule
STERILE POTASSIUM CHLORIDE CONCENTRATE BP 15% W/W | *** | Yaden International (Pvt) Ltd | 117500 |
Liposomal Amphotericin B injection 50mg for I.V. use
Liposomal form of Amphotericin B 50 mg vial | 6250 | ||
Dobutamine Inj. 250mg/20ml
DOBUTAMINE HYDROCHLORIDE 12.5MG/ML | DOBUTAMINE | Akbar Pharmaceuticals (Pvt) Ltd | 37500 |
Enoxaparin Inj.60mg/0.6mlPF.Syringe
ENOXAPARIN SODIUM 60MG/0.6ML | CUTENOX | ABC Pharma Services Pvt. Ltd | 250000 |
Sodium valproate Tab. 200mg
SODIUM VALPROATE TABLETS BP 100MG GASTRO RESISTANT | *** | Novachem Lanka (Pvt) Ltd | 17500000 |
Fentanyl Injection100microgram in 2ml
FENTANYL CITRATE INJECTION 0.1MG/2ML | DOMSUPP | Slim Pharmaceuticals (Pvt) Ltd | 180000 |
Fludrocortisone tablet 0.1mg
FLUDROCORTISONE ACETATE TABLETS USP 100MCG | FLUDRICORT | Yaden International (Pvt) Ltd | 50000 |
Bipha.Isoph.Insulin(Human)Inj. 30/70
BIPHASIC ISOPHANE INSULIN 30/70 BIOSYNTHETICE HUMAN INSULIN INJ. 1000IU/1ML | MIXTARD 30 PENNFILL | Sunshine Healthcare lanka Ltd | 900000 |
Chlorpheniramine MaleateInj.10mg/1ml
CHLORPHENAMINE INJECTION BP 10MG/ML | *** | Ceyoka (Pvt) Ltd | 60000 |
Propylthiouracil tablet 50mg
PROPYLTHIOURACIL TABLETS BP 50MG | PTU | Pettah Pharmacy (Pvt) Ltd | 62500 |
Phenytoin sodium Inj. 250mgin 5ml
PHENYTOIN INJECTION BP 50MG/ML | VERTOIN | Leader Pharma Pvt Ltd | 12000 |
Ergometrine maleate inj.500mcg/1ml amp
ERGOMETRINE INJECTION BP 0.5MG IN 1ML | *** | Ceyoka (Pvt) Ltd | 8750 |
Enoxaparin Inj.40mg/0.4ml PF.Syringe
ENOXAPARIN SODIUM INJECTION USP 40MG/0.4ML | CUTENOX | ABC Pharma Services Pvt. Ltd | 200000 |
Ephedrine Inj. 30mg/1m amp.
EPHEDRINE INJECTION BP 30MG/ML | VEREPHE | Leader Pharma Pvt Ltd | 45000 |
Allopurinol tablet.100mg
ALLOPURINOL TABLETS BP 100MG | HILAC | MAPS Pharma (Pvt) Ltd | 900000 |
Vecuronium bromide Inj. 10mgvial
VECURONIUM BROMIDE FOR INJECTION 4MG/2ML | ***** | Ceyoka (Pvt) Ltd | 8750 |
Noradrenaline Inj. 4mg/2ml
NORADRENALINE INJECTION BP 4MG/2ML | *** | Yaden International (Pvt) Ltd | 300000 |
Tetanus toxoid vaccine 0.5ml(SD) amp
TETANUS TOXOID VACCINE ADSORBED 40 IU in 0.5ML | *** | Citihealth Imports (Pvt) Ltd | 200000 |
Pancuronium bromide inj.4mg/2ml
Pancuronium Injection BP, 4mg/2ml | 1750 | ||
Lignocaine 2% + Adrenalin inj. 30ml vial
LIGNOCAINE HYDROCHLORIDE GEL IP 2% w/w | CIROCATINE GEL | Ceyoka (Pvt) Ltd | 45000 |
Calcium gluconate 10%, Inj.10ml
CALCIUM GLUCONATE INJECTION 10% W/V | *** | B Braun Lanka (Pvt) Ltd | 75000 |
Morphine sulphate Inj. 15mg
MORPHINE SULPHATE INJECTION BP 15MG/ML | VERMOR 15 | Leader Pharma Agency (Pvt) Ltd | 150000 |
Vasopressin Inj. 20 I.U./1mlampoule
VASOPRESSIN INJECTION IP 20 UNITS/ML | VASMED | Klintas (Pvt) Ltd | 5500 |
Midazolam inj. 5mg/1ml amp
MIDAZOLAM TABLETS 7.5MG | DORMICUM | A Baur & Co (Pvt) Ltd | 225000 |
Bupivacaine 0.5%+Glucose 8% in 4ml inj
BUPIVACAINE HYDDROHLORIDE IN DEXTROSE INJECTION USP 0.5% | SAKAINE | Ceyoka (Pvt) Ltd | 68750 |
Vancomycin Inj. 500mg vial
VANCOMYCIN HYDROCHLORIDE FOR INJECTION USP 500MG | VAN-CP 500 | PTC MEDIACL (PVT) LTD | 48000 |
Furosemide (Frusemide) Inj.20mg/2ml
FUROSEMIDE INJECTION BP 20MG/2ML | FRUSEX | Nation Pharma (Pvt) Ltd | 625000 |
Furosemide oral solution USP 20mg/5ml, 150ml bottle | 749 | ||
HEPARIN INJECTION BP 25,000 IU/5ML | RINHEPA 25 | Klintas (Pvt) Ltd | 75000 |
Country of production | Count of records |
---|---|
INDIA | 33 |
SWITZERLAND | 17 |
GERMANY | 16 |
SRI LANKA | 11 |
PAKISTAN | 9 |
BANGLADESH | 8 |
CYPRUS | 8 |
INDONESIA | 6 |
UNITED STATES | 6 |
ARGENTINA | 5 |
Other | 1 |
Watchdog is an open-source research collective. Learn more about us here. Watchdog යනු විවෘත මූලාශ්ර පර්යේෂණ සාමූහිකයකි. අපි ගැන තව දැනගන්න. Watchdog ஒரு திறந்த மூல ஆய்வு நிறுவனம். எம்மைப் பற்றிய அறிய