தமிழில்: #AskWatchdog - 07

தமிழில்: #AskWatchdog - 07

@August 31, 2022

Read this article in English | සිංහල | தமிழ்

image
ஆய்வு : உமேஷ் மொரமுதலி செம்மையாக்கம் : ஆயிஷா நாஸிம் மொழிபெயர்ப்பு : செல்வராஜா கேசவன்

நீங்கள் கேட்டவை:

அத்தியாவசியப் பொருட்கள் சிலதின் விலை தற்போது குறைவடைவதற்கான காரணம் என்ன?

எங்கள் பதில்:

அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாக பல ஊடகங்கள் இம்மாத ஆரம்பத்தில் செய்தி வெளியிட்டிருந்தன. அச்செய்திகளின்படி பருப்பு, சீனி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் இன்னபிற அத்தியாவசியப்பொருட்களின் விலைகளும் ஆகஸ்ட் மாதத்தொடக்கத்தில் குறைவடைந்துள்ளன.

  1. நாணயமாற்றுவிகிதம் நிலையான தன்மை அடைந்தமை,
  2. மத்திய வங்கி அத்தியாவசியங்களை இறக்குமதி செய்வதற்குத் தேவையான வெளிநாட்டு நாணயத்தை வர்த்தகர்களுக்கு வழங்கியமை; அதாவது வணிகங்கள் இறக்குமதியை மேற்கொண்டு கேள்வி நிரம்பலை உறுதிப்படுத்துவதற்கான அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டன.

தெரிவு செய்யப்பட்ட பொருட்களை மட்டும் open accounts மூலம் மாத்திரம் இறக்குமதி செய்ய அனுமதித்தமையின் விளைவாகவே அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை முடிவுக்கொண்டு வரப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்திருந்தார்.  எவ்வாறாயினும், நாணயமாற்றுவிகிதம் நிலைத்தன்மைக்கு கொண்டுவரப்பட்டமையும், உண்டியல் முறையில் நடத்தப்பட்ட open accounts இறக்குமதிகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையுமே விலை குறைவுக்கு காரணமென மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தினார்.

கட்டுப்படுத்திய மிதப்பு நாணய மாற்று விகித பொறிமுறையை இலங்கை மத்திய வங்கி செயற்படுத்தியதன் மூலம் நாணய மாற்று விகிதம் நிலைத்தன்மை அடைந்துள்ளதை தரவுகள் காட்டுகின்றன. கடந்த மூன்று மாதங்களில் உணவல்லாத ஏனைய பொருட்களின் இறக்குமதி பெருமளவில் குறைந்துள்ளதையும் எம்மால் அவதானிக்கக் கூடியதாயுள்ளது. இறக்குமதி கட்டுப்பாடு காரணமாக 2002 ஆகஸ்ட்டிற்கு பிறகு முதல் முறையாக இந்த ஆண்டு (2022) ஜூன் மாதத்தில் தான் விற்பனைப்பொருட்கள் உபரியாகக் கிடைக்கப் பெறுகின்றன.

இதற்கு மேலதிகமாக, உலகளாவிய ரீதியில் எரிவாயு விலைகள் குறைவடைந்தமையாலும் திரவ பெற்றோலின் விலையும் குறைவடைந்துள்ளது. 12.5 கிலோ எரிவாயு உருளை ஒன்றின் விலை 1,050 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

டொலர் மாற்றம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் புதிய விதிமுறைகள் என்னென்ன?

எங்கள் பதில்:

📌
உங்களது பணம் சேவைகளை ஏற்றுமதி செய்து பெறப்பட்டதாயின் (கற்பித்தல், இணைய உள்ளடக்கங்கள், அல்லது வேறு வகையான வழிகாட்டுதல்கள்), அது இலங்கை ரூபாய்களாக மாற்றப்படமாட்டாது. ஆனால், பொருட்களை ஏற்றுமதி செய்து பெறப்பட்டிருப்பின் இலங்கை ரூபாய்க்கு மாற்றப்படும்.

பொருட்களை ஏற்றுமதி செய்வோருக்கு கட்டாய நாணயமாற்று விதி மாற்றமின்றி தொடர்ந்தும் நீடிக்கிறது,  அவர்கள் ஏற்றுமதி மூலம் பெற்றுக்கொண்ட வருவாயில் எஞ்சிய பணத்தினை அடுத்து வருகின்ற மாதத்தின் ஏழாம் நாளுக்கு முன்பு இலங்கை ரூபாய்க்கு மாற்ற வேண்டியது காட்டாயமாகும். எவ்வாறாயினும் ஏற்றுமதியாளர்கள் தமது வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்தவோ, குறிப்பிட்ட சில ஏற்றுமதிப் பொருட்களின் வெளிநாட்டு நாணயக்கொடுப்பனவுகள், ஏற்றுமதி தொடர்பிலான பயணங்களுக்காக வெளிநாட்டு பணத்தினைப்பெறல், மற்றும் வர்த்தமானியின் நான்காவது பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவுகளை மேற்கொள்ள அவ்வருவாயினை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி அனுமதியளிக்கப்பட்ட கொடுப்பனவுகளை மேற்கொண்ட பின் எஞ்சியுள்ள வெளிநாட்டுப்பணம் அடுத்த மாதத்தின் முதல் கிழமையில் இலங்கை ரூபாவாக மாற்றப்படும்.

சேவை ஏற்றுமதியாளர்கள் தமது வருவாயினை வெளிநாட்டு நாணயக்கணக்குகளில் இலங்கை ரூபாய்க்கு மாற்றாமலே வைத்திருக்க அனுமதிக்கப்பட்ட போதிலும், அவற்றை கணக்கிலிருந்து மீளப்பெறுவது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வெளிநாட்டு நாணயப்பற்றாக்குறை காரணமாக கடினமாகவே இருக்கும்.

பல மாதங்களாக மேற்படி கட்டாய நாணய மாற்றங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது. கட்டாய நாணயமாற்று விதி காரணமாக இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், ம்ற்றும் சர்வதேச நிறுவனங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டன என எமது முன்னைய ஆய்வில் தெளிவாக அறியத்தந்திருந்தோம்.

கடற்கரையில் உடல்கள் கரையொதுங்குவதன் பின்னணி என்ன?

எங்கள் பதில்:

மேல் மாகாண கடற்கரைகளில் சடலங்கள் கரையொதுங்குவதன் பின்னணி தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரிதாக எதுவித தகவலையும் தரவில்லை. கோட்டாகோகமவின் முடிவுக்குப்பின் காலிமுகத்திடல் கடற்கரையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதில் இருந்தே உங்களில் பலருக்கு இக்கேள்விகள் எழுந்திருக்கலாம். ஆனால் இவ்வாறான சம்பவம் அதற்கு முன்னரே ஜனவரி மாதமளவில் பதிவாகியுள்ளது. 40 தொடக்கம் 55 வயதுக்குட்பட்ட இரு அடையாளங்காணப்படாத ஆண்களின் உடல்கள் ஜனவரி பத்தாந்திகதி முறையே வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி கடற்கரையோரத்தில் ஒதுங்கியிருந்தன.

இந்த ஆண்டு மட்டும் குறைந்தது இவ்வாறான 11 உடல்கள் மேல் மா

காணக்கரையோரங்களில் ஒதுங்கியுள்ளன. இவற்றுள் ஜூன் 18 இல் புத்தளம் வைக்கல கடற்கரையோரத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறுவன் ஒருவனுடைய உடலும் உள்ளடங்கும். ஜூன் பதினைந்து, வத்தளை கதிரான பாலமருகில் பெண்ணொருவரால் கொலை-தற்கொலை முயற்சியின் போது களனியாற்றுக்குள் வீசப்பட்ட சிறுவனின் உடலே அது என பொலிசார் உறுதிப்படுத்தியிருந்தனர்.

ஏனைய அனைத்து உடல்களும் வயது வந்த ஆண்களுடையவை. அவர்களுள் கத்திக்குத்துக் காயங்களுடன் வெள்ளவத்தை கடற்கரையில் பெப்ரவரி ஐந்தில் கண்டெடுக்கப்பட்ட உடல் அஃப்ஹம் நசீர் எனும் 21 வயது மாலைதீவு மாணவருடையது என அடையாளங்காணப்பட்டது.

நாட்டின் வெவ்வேறு கடற்கரைகளில் கடந்த இருமாதங்களில் பல இறந்த உடல்கள் பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜூலை இருபத்தாறாந்திகதி வெள்ளவத்தை கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு உடலில் வெளித்தெரியும் காயங்கள் ஒன்றும் இல்லையென பொலிசார் உறுதிப்படுத்தியிருந்தனர். ஆகஸ்ட் ஐந்தாந்திகதி வத்தளை டிக்கோவத்த கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட 30 தொடக்கம் 40 வயதுக்குட்பட்ட ஒருவரின் உடலில் தலையும் ஏனைய உறுப்புகளும் துண்டாடப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

காலிமுகத்திடலில் ஜூலை இருபத்தொன்பதாந்திகதி கண்டெடுக்கப்பட்ட உடல், கொட்டாவையைச் சேர்ந்த பத்தொன்பது வயது இளைஞனின் உடல் என அடையாளங்காணப்பட்டது. இவ்வுடல் கண்டெடுக்கப்பட்டு 72 மணித்தியாலம் கழித்து 40 வயது மதிக்கத்தக்க இன்னொருவரின் உடலும் காலி முகத்திடலில் கண்டெடுக்கப்பட்டது.

இக்குற்றங்கள் நடந்தற்கான நோக்கங்களையோ அது தொடர்பான கைதுகளையோ பொலிசார் இதுவரை வெளிப்படுத்தவில்லை. இவ்விறப்புகள் பாதாள உலகக்குழுக்களிடையான சண்டை காரணமாக நடந்தவை எனவும் அரசின் ஆதரவோடு நடந்தவை எனவும் பல ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், இதுவரை வெளிப்படுத்தப்பட்டவற்றை வைத்துக்கொண்டு எதுவித சரியான பதில்களையும் எம்மால் தரமுடியாதுள்ளது.

மேலதிக வாசிப்பிற்கு

எங்களிடம் கேளுங்கள்!

முகநூல், ட்விட்டர், மற்றும் இன்ஸ்ராகிராமில் #AskWatchdog இனைப் பயன்படுத்தியோ, நேரடியாக எமக்கு செய்தி அனுப்பியோ, அல்லது எம்மை ரக் செய்வதன் மூலமே உங்கள் கேள்விகளை கேளுங்கள்.

👥
Watchdog is an open-source research collective. Learn more about us here. Watchdog යනු විවෘත මූලාශ්‍ර පර්යේෂණ සාමූහිකයකි. අපි ගැන තව දැනගන්න. Watchdog ஒரு திறந்த மூல ஆய்வு நிறுவனம். எம்மைப் பற்றிய அறிய