தமிழில்: #AskWatchdog - 04

தமிழில்: #AskWatchdog - 04

@June 23, 2022

Read this article in English | සිංහල| தமிழ்

image
ஆய்வு : உமேஷ் மொரமுதலி செம்மையாக்கம் : ஆயிஷா நாஸிம் மொழிபெயர்ப்பு : மொகமட் பைரூஸ்

நீங்கள் கேட்டது:

மின்சார சட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் என்ன, அதன் அர்த்தம் என்ன?

எங்கள் பதில் :

ஜுன் 09 ஆம் திகதி, 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார திருத்த சட்டமூலம் திருத்தங்கள் இன்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 எம்.பி.க்களும் எதிராக 36 எம்.பி.க்களும் வாக்களித்தனர். 13 எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இச் சட்டமூலம் 25 மெகாவோட் மின்சாரப் பிறப்பாக்கக் கொள்வனவுக்கு மேலான மின்சாரப் பிறப்பாக்கத்திற்கு உரிமையொன்றை வழங்குவதற்கிருந்த தடைகளை நீக்க வழிவகுக்கிறது.

இதன் பொருள், 25 மெகாவோட்டிற்கு மேல் திறன் கொண்ட புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கான விலை மனுக்கள் போட்டி ஏல முறை மூலம் வழங்கப்பட வேண்டியதில்லை. இதனைத் தொடர்ந்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் (CEBEU) அரசாங்கம் இத் திருத்தங்களை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அச்சுறுத்தியது. அத்துடன் நாட்டில் மின் உற்பத்தி திட்டங்களுக்கான போட்டி ஏலத்தை நீக்க இந்த திருத்தம் முயற்சிக்கிறது என்றும் குற்றம்சாட்டியது. அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் (AGEL) நிறுவனத்தினால் முன்மொழியப்பட்ட மன்னார், பூநகரியில் 500 மெகாவாட் காற்றாலை மின் திட்டத்தை செயற்படுத்தவே இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டது என்றும் CEBEU கூறியது. பின்னர் CEBEU வேலைநிறுத்தத்தை கைவிட்டது.

எனினும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அடிப்படையிலான மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காகவே இந்தத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் முதலீடு செய்ய வெளிநாட்டு நேரடி முதலீடுகளையும் (FDI) உள்ளூர் முயற்சியாளர்களையும் அரசாங்கம் ஊக்குவிக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

image

இதற்கிடையில், இந்த திருத்தங்கள் போட்டி ஏலத்தின் தேவையை நீக்குவதன் மூலம் ஊழலுக்கான கதவைத் திறக்கிறது என சமகி ஜன பலவேகய (SJB) குற்றஞ்சாட்டியது. SJB பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டமூலத்தில் போட்டி ஏலத்தை உறுதிப்படுத்தும் திருத்தங்களை முன்மொழிந்தார், ஆனால் அவை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் நிராகரிக்கப்பட்டன. கலாநிதி ஹர்ஷ டி சில்வாவினால், 10 மெகாவோட்டுக்கும் குறைவான மின் உற்பத்தித் திட்டங்களுக்கு போட்டி ஏலத்தை ரத்துச் செய்ய குழுநிலையில் திருத்தங்கள் முன்மொழியப்பட்டது.

"வெளிப்படையற்ற கொள்முதல் மற்றும் ஊழல் காரணமாக மின்சாரத்திற்கு தேவையானதை விட அதிக கட்டணம் செலுத்துகிறோம். புதுப்பிக்கத்தக்க திட்டங்களில் போட்டிக்கான தேவை இருந்தது, ஆனால் தாமதங்களைக் கொண்டிருந்தது. சிக்கலைச் சரிசெய்வதற்குப் பதிலாக, அவர்கள் போட்டித்தன்மையிலிருந்து விலகியுள்ளனர். இது ஒரு பயங்கரமான முடிவு.” கலாநிதி ஹர்ஷ டி சில்வா, 09 ஜூன் 2022

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இலங்கையின் மட்டுப்படுத்தப்பட்ட கவனக்குவிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு இங்கே.

பொருளாதார நெருக்கடியின் போது மின் உற்பத்தி மற்றும் புதுப்பிக்க முடியாத எரிசக்தி மூலங்களுக்கான செலவு தொடர்பில் இலங்கை தீவிர கரிசனை கொண்டுள்ளது. இதுபற்றி முன்னர் விரிவாக ஆராய்ந்தோம். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், நாட்டிற்கு அதிகமான புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான பெரிய அளவிலான ஊழலின் மூலம் அது நடைபெறக்கூடாது.

திருடப்பட்ட சொத்துக்களை இலங்கையால் மீட்க முடியுமா?

எங்கள் பதில் :

அரசியல்வாதிகள் பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்துவிட்டார்கள், அவற்றை மீட்க வேண்டும் என்பது நாம் அடிக்கடி கேட்கும் குற்றச்சாட்டு. எவ்வாறாயினும், திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு, இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்றோ அல்லது குறித்த சொத்துக்கள் குற்றச் செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட இலாபம் என்றோ தீர்ப்பு கிடைத்தால் மட்டுமே, திருடப்பட்ட சொத்துக்களை மீட்டெடுக்க முடியும்.

இலங்கையில் உள்ள பல சட்டங்கள் உள்நாட்டில் திருடப்பட்ட சொத்துக்களை கைப்பற்றவும், பறிமுதல் செய்யவும் முடக்கவும் அனுமதிக்கிறது. இலங்கையில் இவ்வாறான குற்றவியல் வழக்குகள் முடிவுக்குவர சராசரியாக 10.2 வருடங்கள் தேவைப்படும்.

திருடப்பட்ட சொத்துக்களை மீட்க வேண்டுமாயின் சட்டத்தில் திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும்.

திருடப்பட்ட சொத்துக்கள் வெளிநாட்டிற்கு மாற்றப்பட்டால், அந்தந்த நாடுகளின் சட்ட அமுலாக்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவற்றை மீட்டெடுக்க முடியும். இந்த செயல்முறையும் சுமார் 10 வருடங்கள் எடுக்கும். இருப்பினும், வெளிநாட்டிற்கு மாற்றப்பட்ட சொத்துக்களை மீட்டெடுப்பதற்கான பரந்த சட்டங்கள் எங்களிடம் இல்லை.

💡
‘திருடப்பட்ட சொத்துக்கள்’ என்பது அரசாங்க நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலஞ்சம் அல்லது ஊழல் மூலம் பெறப்பட்ட பணம் அல்லது சொத்துக்களைக் குறிக்கலாம். இது ஒரு அரசியல்வாதி, போட்டிமிக்க விலை மனு கோருவதற்குப்; பதிலாக ஒரு ஒப்பந்தக்காரரிடமிருந்து இலஞ்சம் வாங்குவதாக இருக்கலாம். மற்றொரு உதாரணம் ஓர் அரசியல்வாதி அரசாங்க சொத்தை அதன் உண்மையான மதிப்பை விட குறைந்த விலையில் கொள்வனவு செய்வது. இத்தகைய பரிவர்த்தனையால், அரசாங்கம் வருமானத்தை இழக்கும் அதே வேளையில் அரசியல்வாதி பண ரீதியாக நன்மைகளைப் பெறுகிறார்.

மேலதிக வாசிப்புக்கு

Ask us questions!

Use #AskWatchdog on Twitter, FB or Instagram, or simply tag us there.

👥
Watchdog is an open-source research collective. Learn more about us here. Watchdog යනු විවෘත මූලාශ්‍ර පර්යේෂණ සාමූහිකයකි. අපි ගැන තව දැනගන්න. Watchdog ஒரு திறந்த மூல ஆய்வு நிறுவனம். எம்மைப் பற்றிய அறிய