ஓட்டமாவடி: இறந்தும் இல்லை நிம்மதி

ஓட்டமாவடி: இறந்தும் இல்லை நிம்மதி

அரசு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கடும்போக்கு தேசியவாதம் மற்றும் இனவாதம் தவிர்ந்த வேறெதுவித அடிப்படைக் காரணங்களுமின்றி, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை கட்டாயமாக எரிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவை அரசாணையாக வெளியிட்டிருந்தது. மாதக்கணக்கில் நீடித்த பரப்புரைகள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்களுக்கு பின்பு இவ்வரசாணையானது அரசினால் மீளப்பெறப்பட்டது. அதற்கு பதிலாக,  அரச கொரோனா சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியான ‘செய்கடமை’ (இட்டுகம) நிதியில் பல பில்லியன்கள் பணம் சேர்ந்திருந்த போதும், குடும்பத்தினர் உயிரிழந்தவர்களை தமது சொந்த செலவில் கிழக்கு மாகாணத்தில் நெடுந்தொலைவிலுள்ள கிராமம் ஒன்றில் புதைக்கவேண்டியிருந்தது.

@February 1, 2022

Read this article in English | සිංහල | தமிழ்

image
செய்தி மொஹமட் பைரூஸ், ஆயிஷா நாஸிம், அமலினி டி சாய்ரா செம்மையாக்கமும் தரவுப் பகுப்பாய்வும் யுதஞ்சய விஜேரத்ன, ரீனிகா டி சில்வா படங்கள் அமலினி டி சாய்ரா மொழிபெயர்ப்பு செல்வராஜா கேசவன்
  • கட்டாய எரியூட்டல்களுக்கு பிறகு, மார்ச் 2021 இலிருந்து மார்ச் 2022 வரையான காலப்பகுதியில் 3600க்கு மேற்பட்டோர் (பெரும்பாலும் முஸ்லிம்கள்) ஓட்டமாவடியில் கொத்துக்கொத்தாக புதைக்கப்பட்டனர்.
  • இடுகாட்டினை உண்டாக்குவதற்காக 21.5 ஏக்கர்கள் நிலத்தினை அவ்வூர் மக்கள் இழக்கவேண்டியிருந்தது. ஒதுக்கப்பட்ட இடத்தில் 10 ஏக்கர்கள் மாத்திரம் இடுகாட்டுக்காகவும் மீதி நிலம் ‘தடுப்பு வலயமாகவும்’ பயன்படுத்தப்படுகின்றது.
  • கொரோனா துயர் துடைப்பு நிதியில் தேவையானளவு பணமிருந்த போதிலும், இழப்பீடு வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அரசு எதுவித இழப்பீடுகளையும் வழங்கவோ செலவுகளில் பங்களிப்புச் செய்யவோ முயற்சி செய்யக்கூட இல்லையென உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொடுந்தீ

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை இறக்கிவிட்டு வெள்ளநிற பாரவூர்தியொன்று மெதுவாக நகரத்தொடங்குகிறது. மஜ்மா நகரின் ஓட்டமாவடியின் பரந்த நிலப்பரப்பின் ஆழ்ந்த அமைதிக்கு மத்தியில், புதிதாக தோண்டப்பட்ட சவக்குழிகளில் இடப்பட்ட உடல்களை அகழ்பொறி மெதுவாக மணலைக் கொண்டு மூடும் சத்தம் மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கிறது.

image

நாங்கள் ஏன் இங்கு வந்திருக்கின்றோம் என்பதைப் புரிந்து கொள்ள, இலங்கையில் நடக்கும் கட்டாயப்படுத்தப்பட்ட எரியூட்டல்களின் கொடூரத்தை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

2020 ஏப்ரல் மாதம், கொரோனாவால் இறந்தவர்கள் கட்டாயம் எரிக்கப்பட வேண்டும் என்ற அரசாணையை இலங்கை அரசு வெளியிட்டிருந்தது.

முஸ்லிம் மக்களே கொரோனாவைப் பரப்புகின்றனர் எனும் வதந்தியின் பின்னணியிலேயே அரசின் இம்முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகின்றது. இக்கொள்கை முடிவு அறிவிக்கப்பட முன்பு, அரச மருத்துவ ஊழியர்கள் சங்கமும் (GMOA) இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகமும் (ICTA) இணைந்து ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவிடம் கொரோனாவுக்கான மூலோபாய முன்மொழிவொன்றை முன்வைத்திருந்தன. அவை அம்முன்மொழிவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பரவலுக்கு அதிகம் பங்களிக்கக்கூடிய மக்கள் கூட்டமாக முஸ்லிம்களை குறித்திருந்தன.

அக்குறிப்பு பின்னர் மீளப்பெறப்பட்ட போதிலும், இலங்கை சுகாதார அதிகாரிகள் நிலத்தடி நீருடாக வைரஸ் பரவுவதால், கொரோனாவால் இறந்தவர்களை எரிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தனர். முஸ்லிம்களின் சமய கடமை இறந்தோரின் உடலை புதைத்து இறுதிக்கடன்களை முடிக்க அறிவுறுத்துவதால் இம்முடிவு இலங்கை முஸ்லிம்களை பெரிதும் பாதித்துள்ளது.

image

தொற்றுநோயியல் மருத்துவ நிபுணர் மாலிக் பீரிஸ் உட்பட புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்கள், இறந்த உடல்கள் மூலம் கொரோனா பரவுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர்; உலக சுகாதார அமைப்பின் (WHO) இடைக்கால வழிகாட்டுதல், கொரோனாவால் உயிரிழந்தவர்களை குடும்ப மற்றும் பாரம்பரிய சடங்குகளுடன் எரிக்கவோ புதைக்கவோ முடியும் என தெரிவிப்பதுடன் அதில் நிலத்தடி நீர் மாசுபாடு குறித்து எதுவித குறிப்புகளும் இடம்பெறவில்லை.

எது எவ்வாறாயினும், சட்ட மருத்துவ ஆலோசகரும் தடயவியல் மருத்துவ நிபுணரும் கொரோனா இறப்புகள் முகாமைக்குழுவின் தலைவருமான மருத்துவர் சன்ன பெரேரா அவர்களால்   சரியான நடவடிக்கை எனக்கூறப்படும், அரசின் இம்முடிவு மற்றுமொரு இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கையாகவே தோற்றுகிறது. ‘இவ்வைரஸ் எவ்வாறு தொழிற்படும் எனத்தெரியாதபடியால்’ ‘மக்களை பாதுகாப்பதற்காக சில நடவடிக்கைகளை’ எடுக்க வேண்டியிருந்ததாக பெரேரா கூறுகிறார். அரச தலைமை தொற்றுநோயியல் மருத்துவ நிபுணர் சுகத் சமரவீர பிபிசி ஊடகத்துக்கு, ‘உடல்களை புதைப்பது நிலத்தடி நீரை மாசடையச் செய்யலாம்’ என்பதால் ‘நிபுணர்களின் மருத்துவ ஆலோசனைப்படி’ அரசு செயற்படுகிறது எனக்கருத்து தெரிவித்து இவ்அச்சத்தை மேலும் அதிகரித்தார்.

குழந்தைகள் தொடங்கி முதியவர்களை வரை இறந்தவர்களது உடல்கள் அனைத்தும் கட்டாயப்படுத்தி எரியூட்டப்பட்டன. இறந்த சிலரது உடல்களை அவர்களது குடும்பத்தினரைக்கூட பார்க்க அனுமதிக்கவில்லை; சில வேளைகளில் தேவைப்பட்ட போதும் மாத்திரம் குடும்பங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் காவல்த்துறையினர் தங்களுக்கு ‘வழங்கப்பட்ட ஆணைகளை மட்டும் பின்பற்றி’ அலட்சியமாக செயற்பட்டதாலும், தகவல்கள் குடும்பத்தினருக்கு முறையாக தெரிவிக்கப்படாததாலும், குடும்பங்கள் மன உளைச்சலும் கோபமும் அடைந்தனர்.

கிட்டத்தட்ட ஓராண்டு நீடித்த பரப்புரைகள் மற்றும் சர்வதேச மட்டத்திலான வேண்டுகோள்களுக்குப் பின், அரசு உடல்களை பொதுச்சுகாதார சேவைகள் ஆணையரின் வழிகாட்டுதல்களுக்கு அமைய இடுகாடொன்றிலோ அல்லது தொடர்புடைய அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட இடமொன்றிலோ அவ்வதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் புதைக்க அனுமதிக்கும் அரசாணையை அரசு வெளியிட்டது.

image

மாதக்கணக்கில் நீடித்த சுகாதார அமைச்சினுடைய தொழிநுட்பக்குழுவின் கலந்துரையாடல்களுக்கு பிறகே இம்முடிவு எடுக்கப்பட்டதாக சுகாதார அமைச்சின் கொரோனாவுக்கான ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.

‘‘நாடு முழுவதும் கொரோனாவால் இறந்தவர்களை தமக்கு அண்மையில் உள்ள இடுகாடுகளில் புதைக்க அனுமதிக்குமாறு பலர் அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இவ்விடயம் 2021 டிசம்பர் மாதத்திலிருந்தே தொழிநுட்பக்குழுவின் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு 2022 மார்ச் ஐந்தாம் திகதி புதைப்பதற்கு அனுமதி வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது.’’ என அவர் தெரிவித்திருந்தார்.

தொழிநுட்ப பரிசீலனை மாத்திரமன்றி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அழுத்தங்களும் கட்டயாப்படுத்தப்பட்ட எரியூட்டுதல்கள் நிறுத்தப்படக் காரணமாயிருந்தது, என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவுப் ஹக்கிம் அவர்கள் தெரிவித்திருந்தார்.

நீண்ட தேடலுக்குப் பிறகு, இராணுவமும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் கொழும்பிலிருந்து 290 கிலோமீற்றர்கள் தொலைவில் மட்டக்களப்பிலுள்ள மஜ்மா நகரின் ஓட்டமாவடிப் பிரதேசத்திலுள்ள குப்பைக்கிடங்கொன்றுக்கு செல்லும் வீதியொன்றின் குறுக்கேயுள்ள காணித்துண்டொன்றினை இடுகாடாகப் பயன்படுத்த தெரிவு செய்தனர்.

image

இறந்தவர்கள் வேறெந்த இடத்திலும் புதைக்கப்பட முடியாதென்பதால் குப்பை குவியல்களின் அருகேயுள்ள இத்தனிமையான இடத்திற்கு உடல்கள் கொத்து கொத்தாக வந்து சேரத்தொடங்கின. 2021 மார்ச்சில் தொடங்கி 2022 மார்ச் வரை ஒட்டு மொத்தமாக 3,634 பேர் இங்கு புதைக்கப்பட்டுவிட்டனர்.

முழுக்குடும்பத்தினரும் தமது பிரியமானவர்களின் உடல்களோடு ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்கள் தூரம் பயணம் செய்து வந்த போதிலும், கொழும்பு-மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள திருப்பத்துக்கு அப்பால் அவர்களில் இருவர் மாத்திரமே அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் கூகிள் வரைபடத்தில் ‘ஓட்டமாவடி ஜனாஷா முனை’ எனக்குறிக்கப்பட்டுள்ள இடத்தில் இறங்கி சிறிய தகரக்கொட்டில் ஒன்றில் தேவையான வழிபாடுகளை செய்து விட்டு உடலுடன் சென்றவர்கள் திரும்பும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.

image

குண்டுங்குழியும் நிறைந்த பாதையில் வாகனங்கள் இடுகாட்டை நோக்கி பயணஞ்செய்கையில், இறுதித் திருப்பத்தில் ஒரு சோதனைச்சாவடியையும் இடுகாட்டடியில் ஒரு சோதனைச்சாவடியையும் கடந்து செல்ல வேண்டும். இந்த இரு சாவடிகளுக்குமிடையில் முன்பு குப்பைக்கிடங்காக இருந்து தற்போது முற்றிலும் வெட்டையாக கிடக்கும் பகுதியினூடாக வாகனங்கள் பயணஞ்செய்ய வேண்டும்.

image

பொலிஸ் ஒருவரும் இராணுவ வீரர் ஒருவரும் காத்து நிற்கின்ற, ‘அல் நூர் அறக்கட்டளை’ என எழுதப்பட்ட சிறிய தகரக்கொட்டில் ஒன்றில் கொட்டுகின்ற மழையால் பலத்த சத்தம் எழுகிறது.

ஓட்டமாவடி என்பது ஒரு பெரிய இடுகாடு மாத்திரமே அங்குள்ள கல்லறைகளில் பெயர்கள் கூடக் காணப்படவில்லை இலக்கங்கள் மாத்திரமே காணப்படுகின்றன.

image

மாண்டவர் பூமி

ஓட்டமாவடியில் தொடக்கத்திலிருந்தே சிக்கல்கள் இருந்தன.

முதலாவது சிக்கல் நிலத்தைச் பற்றியது.

இடுக்காட்டுக்கென ஒதுக்கப்பட்ட 21.5 ஏக்கர் நிலத்தில், 10 ஏக்கர் மாத்திரமே பயன்படுத்தப்பட்டது, எஞ்சியது அதைச்சுற்றிய தடுப்பு வலயமாகவே பயன்படுத்தப்படுகிறது.

மாவட்ட செயலரும் இராணுவமும் இடுகாட்டுக்கு பொருத்தமான நிலத்தை அடையாளங் காணுமாறு கேட்டுக்கொண்டதாக ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் சிஹாப்தீன் தெரிவிக்கின்றார். பிரதேச சபையால் பரிந்துரை செய்யப்பட்ட நிலமானது தாழ்வாக உள்ளதெனக் குறிப்பிடப்பட்டு  சுகாதார அமைச்சாலும் இராணுவ தொழிநுட்பக் குழுவாலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பின்பு விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட நிலமொன்று அடையாளங் காணப்பட்டது. உடல்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, நில ஆக்கிரமிப்பும், ஓட்டமாவடிப் பிரதேச மக்களின் கவலையும் அதிகரிக்கத் தொடங்கின.

image

‘தடுப்பு வலயத்துக்காக’ மக்கள் தமது விவசாய நிலங்களையும் குடியிருப்பு நிலங்களையும் இழக்க நேரிட்டதாக, மஜ்மா நகரின் உள்ளூர் அபிவிருத்தி சபையின் தலைவர் சமீம் எம்மிடம் தெரிவித்தார். போரின் போது ஓட்டமாவடியிலிருந்து இடம்பெயர்ந்திருந்த 320 க்கு மேற்பட்ட குடும்பங்கள் அங்கு மீளக்குடியேறியுள்ளதாக குறிப்பிட்ட சமீம், அவர்களது ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் விவசாயத்தை சுற்றியே இருப்பதாகவும் தெரிவித்தார்.

‘‘இவ்வூர் மக்கள் தமது நாளாந்த வாழ்க்கையில், சுத்தமான குடிநீர் இன்மை, குறைவான கழிப்பறை வசதிகள், மற்றும் ஒழுங்கற்ற சாலைகள் எனப்பல சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் 14 கிராமவாசிகள் கொரோனா இடுகாட்டுக்காக தமது நிலங்களை இழந்ததுடன், அவர்களுக்கு அதற்கான எதுவித இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை.’’

‘‘இங்கு முஸ்லிம்கள் மட்டும் புதைக்கப்படவில்லை, ஏனைய மதத்தைச் சேர்ந்த மக்களும் தமது அன்புக்குரியவர்களை நெருப்பிலிட விரும்பாமல் இங்கு புதைத்துள்ளனர். இத்தேவைக்கு முன்னால் எனது நிலம் ஒன்றுமேயில்லை. எனது மனைவியுடன் கதைத்து அவரது ஒப்புதலையும் பெற்றுக்கொண்டு எமது நிலத்தை உடனடியாகக் கையளித்து விட்டேன். ’’ என, எதுவித எதிர்பார்ப்புகளுமின்றி முதன்முதலில் தனது மூன்று ஏக்கர் நிலத்தை கொடையளித்த ஜாஃபர் அவர்கள் தெரிவித்தார்.

image

பல பணக்கார முஸ்லிம்கள் அவரக்கு பணம் கொடுக்க விரும்பியதாகவும் அதைத்தான் மறுத்து விட்டதாகவும் ஜாஃபர் எம்மிடம் தெரிவித்தார். எவ்வாறாயினும், அரசு வேறெதாவது மாற்று நிலத்தை அவருக்கு வழங்குமாயின் தனது விவசாயத்தை தொடர்வதற்காக அதை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எல்லோருடைய நிலையும் அவருடையதைப் போன்று இருக்கவில்லை. அவரது நிலத்துக்கு அருகிலுள்ள நிலங்கள் அதற்குச் சொந்தமான 13 பேரிடமிருந்து ஒப்புதல் பெறாமலே எடுத்துக்கொள்ளப்பட்டுவிட்டன. இவர்களுள் விவசாயி முஹைதீனும் (49) ஒருவர். ‘‘எமது நிலம் எடுக்கப்பட்டு 10 நாட்களுக்குள் மாற்று நிலம் வழங்கப்படுமென, மாவட்ட செயலர் எம்மை வரவழைத்துக் கூறினார். ஒரு ஆண்டு கடந்தும், இதுவரை எமக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை.’’ என அவர் சோகமாகக் கூறினார்.

சுகாதார அமைச்சுக்கு பலமுறை இது தொடர்பில் பிரதேச சபை கடிதம் எழுதியிருந்தது, கிழக்கு மாகணத்தின் இராணுவத்தளபதியையும் சந்தித்திருந்தது. உள்ளூர் இடுகாடுகளில் உடல்களை புதைக்க அரசு அனுமதித்த, 2022 பெப்ரவரி வரை இதற்கு எதுவித பதிலும் கிடைக்கப் பெறவில்லை.

இரண்டாவது சிக்கல் அரசின் ஆதரவுக்குறைவு.

கொவிட் – 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் ஆணையின் கீழேயே உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட போதிலும், ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் மக்களே சடலங்களைப் புதைப்பதிலும், அவ்விடத்தைப் பராமரிப்பதிலும் ஈடுபட வேண்டியதாயிற்று.

ஆண்டு முழுவதும் இடம்பெற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடக்கங்களுக்கு அரசு எதுவித பொருளாதார உதவிகளையும் செய்யவில்லை என ஓட்டமாவடிப் பிரதேச சபையின் தலைவர் நௌஃபிர் அவர்கள் தெரிவித்தார். பிரதேச சபை இடுகாட்டுக்காக அகழ்பொறி ஒன்றை ஒதுக்கியதுடன், அதற்குரிய எரிபொருள் மற்றும் திருத்தச் செலவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

image

‘‘இப்பெருந்தொற்றுக்காலத்தில் இதுவரை மூன்றுமுறை முழுமையான முடக்கத்தில் இருந்துள்ளோம். இவ்வாறனதொரு காலகட்டத்தில் இம்மாதிரியானதொரு செயலுக்கு ஒரு ரூபாயைக்கூட அரசு ஒதுக்காதது மிகவும் கவலைக்குரியது.’’ என நௌஃபிர் தெரிவித்தார். இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரதேச சபையின் செயலாளர் சிஹாப்தீன், இச்செலவுகளில் பெரும்பாலனவை பெருந்தன்மை மிக்க நன்கொடையாளர்களின் உதவியுடனேயே மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டார்.

‘‘11 பேர் உடல்களை அடக்கஞ் செய்வதில் எமக்கு உதவியாக இருந்தனர். அவர்களுக்கு சிறியதொரு தொகையை கொடுப்பனவாக வழங்கினோம். இது கூட கொழும்பிலிருந்த சில முஸ்லிம் நலக்குழுக்களின் பங்களிப்பாலேயே சாத்தியமானது. அடையாளக்கல்களாக இங்கு நாட்டப்பட்டுள்ளவை கூட சில பணக்கார முஸ்லிம்களினால் நன்கொடையாக வழங்கப்பட்டவையே.’’ எனவும் அவர் தெரிவித்தார்.

இறந்தவர்களின் குடும்பத்திடமிருந்து எது வித பணமும் மேற்படி சேவைகளுக்காக அறவிடப்படவில்லை எனத்தெரிவித்த அவர், ‘‘இதை நாங்கள் இலவசமாக ஒரு பொதுச்சேவையாகவே செய்தோம்.’’ என்றார்.

image

தொண்டூழியர்களான ஜெஃப்ரி மற்றும் ரஃபீக் ஆகியோர், ‘‘அடக்கங்களை மேற்கொள்ள ஒருவரும் தயாராக இருக்கவில்லை, எமக்கு உதவ யாருமேயில்லை.’’ என்றனர். ‘‘இராணுவத்தினர் உடல்களை இங்கு கொண்டு வந்து மட்டுமே தருவோம் மீதியை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என எங்களிடம் (பிரதேச சபை) தெரிவித்தனர். நிறைய இறப்புகள் நடந்திருந்ததால், மக்கள் தொற்றையெண்ணி அஞ்சினர். அடக்கங்களை மேற்கொள்ளத் தொடங்கிய பின், எங்கே நாங்கள் அவர்களுக்கு தொற்றை வழங்கிவிடுவோமோ என எண்ணி ஊரிலுள்ள ஒருவரும் எங்களை நெருங்கக்கூடவில்லை.”

இடுகாட்டுக்கு உடல்களை கொண்டு செல்லும் செலவு முழுவதும் இறந்தவர்களின் குடும்பத்தையே சாரும் என முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் பிமால் ரத்னாயக்க தெரிவித்திருந்தார். உதாரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து ஓட்டமாவடிக்கு உடலை கொண்டு செல்வதற்கான செலவு ரூபா 85,000. ஆனால் அவரது கூற்றுக்கு மாறாக, மருத்துவமனையிலிருந்து இடுகாட்டுக்கான போக்குவரத்து செலவுகளை இலங்கை இராணுவமே பொறுப்பேற்றுக் கொண்டதாக மருத்துவர் அன்வர் ஹம்தானி எம்மிடம் தெரிவித்தார்.

“உறவினர்கள் இறந்தவர்களின் இறுதிச்சடங்குகளை நிறைவேற்ற மஜ்மா நகருக்கு வர முடியும், ஆனால் அவர்களுக்கான செலவுகளை அவர்களே பார்த்துக்கொள்ளவேண்டும். எது எவ்வாறாயினும் உடல்களை கொண்டு செல்வதற்கான அனைத்து செலவுகளையும் இராணுவமே ஏற்றுக்கொண்டது.” என அவர் மீண்டும் கூறினார்.

கொழும்பு மற்றும் கண்டி பள்ளிவாசல்களின் கூட்டமைப்புகளும் உடல்களை கொண்டு செல்வதற்குரிய பணிகளில் சுகாதர அமைச்சுடனும் இராணுவத்துடனும் இணைந்து  ஈடுபட்டதை நாம் அறிவோம். எனவே இது தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக கொழும்புப் பள்ளிவாசல்களின் கூட்டமைப்பின் செயலாளர் அஸ்லாம் ஒத்மான் அவர்களை தொடர்பு கொண்டோம்.

image

ஒத்மான் அவர்களின் கூற்றுப்படி, கிழக்கு மாகணத்தில் இறந்தவர்களின் உடல்கள் நேரடியாக மஜ்மா நகருக்கு கொண்டு செல்லப்பட்ட அதே வேளையில், நாட்டின் ஏனைய பகுதிகளில் இறந்தவர்களின் உடல்கள் கொழும்புக்கோ, குருணாகலுக்கோ அல்லது அனுராதபுரத்துக்கோ கொண்டு செல்லப்பட்டு பின்பு அங்கிருந்து இராணுவத்தினரால் ஓட்டமாவடிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்போது இராணுவத்தினரால் வழங்கப்பட்ட சேவைகளுக்காக அவர்களை ஒத்மான் அவர்கள் பாராட்டவும் செய்தார்.

‘‘அரசு பெருமளவில் பொருளாதார உதவிகளை நல்கவில்லை. இராணுவம் இறந்தோரின் உடல்களை கொண்டு செல்லும் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டதோடு அதற்கு தேவையான வாகனங்கள் மற்றும் ஆளணியையும் வழங்கியது. இதற்குத் தேவையான அனைத்து சவப்பெட்டிகளையும் முஸ்லிம் சமூகத்தின் பணக்காரர்கள் வழங்கினர். அந்நேரத்தில் ஒரு சவப்பெட்டியின் விலை 4,500 ரூபாய் அளவிலிருந்தது. நாங்கள் ஒரு 1000 சவப்பெட்டிகளையாவது இதுவரை வழங்கியிருப்போம்.’’

But what about Itukama, the COVID-19 fund?

Itukama is Gotabaya Rajapaksa’s national fundraiser for ‘healthcare and social security’ and to ‘support the brave heroes on the frontlines of the battle against COVID-19.’

The former president’s widely advertised effort brought in over two billion rupees. Rs. 2,024,953,352.70 to be precise (or, two billion twenty four million nine hundred fifty three thousand three hundred and fifty two rupees, and seventy cents).

Watchdog submitted an RTI (Right to Information request) to know what the money was used for, and how much of it was spent.  Of over two billion, the total amount dispersed was a mere Rs. 197, 476, 824 - aka one hundred ninety seven million four hundred seventy six thousand eight hundred and twenty four rupees.

The funds were issued only to State bodies, and not a single rupee was disbursed towards any of the provincial councils, nor was anything spent on costs at Oddamavadi.

Here’s a breakdown of the expenses and the Ministry affiliated with it:

Activity
Expenditure (LKR)
Implementing agency
PCR testing
42,605,812
Ministry of Health; University Grants Commission
Advocacy Programme
67,543,967
Ministry of Health
Quarantine facilities
38,031,065
Ministry of Health; Ministry of Defence
National Vaccination Programme
41,545,980
Ministry of Health
Purchase of ICU beds
7,750,000
Ministry of Defence

Over 67 million was spent on ‘advocacy programmes’; none was sent towards the mass grave of over 3000 bodies. As of the time of our investigation, there was approximately Rs. 1,827,476,528 in balance unused and unaccounted for.

Counting bodies

In March this year, Watchdog set out to examine Oddamavadi: in addition to site visits and interviews, we also obtained the logs — often maintained by the volunteer burial workers — of those interred there. These are the snippets you’ve seen throughout this story, with the names encrypted and addresses trimmed to protect privacy.

Mapped out, this is what the data shows us.

image

The scale of the trauma dealt is national, to say the least. From all across Sri Lanka come the dead — that’s them in green. And with them, their loved ones; making a cruel pilgrimage - especially in the middle of an ongoing economic crisis - for closure. Their destination is the red tower highlighted in the map above — Oddamavadi. When the pandemic was at its peak in August 2021, an average of 40-60 bodies were buried on a daily basis. Every population center in the country has a tale of suffering, written into this tragedy by an irrational, racist policy and neglect.

It isn’t just the Muslims who are buried here. A significant number of the buried population are from Buddhist and Hindu faiths. Looking through the data, one is struck by entries like this.

image

There are unknown bodies left here, discarded, and interred. There is a seven-day old infant and a 103 year-old woman. There are foreign nationals buried here. There is the sheer thoughtlessness of the cruelty on display, hiding behind bureaucracies and press statements.

Walking through the graveyard

Even though burials at Majma Nagar are now officially over, the site, as of the beginning of August, remained under control of the army. Two military checkpoints were still in operation; no-one was allowed to enter without permission. Two officers at the checkpoint would take down your name, address, ID, phone number and check the photo on a small token that proves that loved one is indeed buried in this mass grave. It was the size of a business card – white, printed with the words ‘Keep ourself from / අපව වළක්වන්න / எம்மை பாதுகாப்போம் COVID-19’. The card bore the name of the deceased and their ‘grave’ or serial number.

Once this registration is complete, the officers would say that family may now ‘look’ at the site. ‘Look’, from the yellow police tape that marks a fluttering ‘boundary’ along one small section of the graves. People would arrive hoping to pay tribute to their loved one’s final resting place, but instead have to utter their prayers and grief towards the whole graveyard, scattered with short tombstones.

When we began interviewing people for this story, S. Shihabdeen, Secretary of the Oddamavadi Pradeshiya Sabha, had requested the authorities to hand over the authorisation of the burial site to the Oddamavadi Pradeshiya Sabha, and to offer rewards or compensation to those who volunteered their time and effort to work on the site.

Indeed, on the 17th of August, the military handed over the site to the Pradeshiya Sabha and left; now family members can visit without prior permission.

Shihabdeen’s future plans involve making the place more accessible as a park that families of the deceased can visit and walk through. Paths for foot traffic, as well as small buildings in which people can stay at for a while after making a long journey.

To do this, he hopes there will be some support from the Government, even though there has been none so far.

image

On 05 March 2021, two months or more after his death, was when Muhammed Siddeek was finally laid to rest. He was 63 years old, and was one among nine others who were waiting for their burials; and who were buried on the first day the site was established. His living relatives were visited by the police several times during this in-limbo period of being dead, but deep-frozen above ground. They attempted to force the family’s consent for cremations. They had to get an enjoining order to keep Siddeek from the pyre.

“Maama (uncle) died when the mandatory cremation policy was in force, and was only buried 70 days after his death,” his son-in-law, Mohamed Amjath tells us. Until then, the family was plagued by the worry of whether or not they would wake up to the news of another forced cremation.

As Muslims generally bury their dead within 24 hours, Amjath recollected how stressful the months leading to Siddeek’s burial was, and how none of them could get a peaceful night’s sleep.

“Those were very harsh and cruel days.”

image

📎
தமிழ்This investigation contains on-site photos as well as modified Copernicus Sentinel-2 satellite data [2022] from SentinelHub and HERE maps [imagery ©2022 DigitalGlobe or ©CNES 2015, Distribution Airbus DS; © 2015 DigitalGlobe]. These image were acquired between 1st March 2022 and 28th August 2022. Watchdog would like to thank the European Space Agency and HERE Technologies for their free services. We would also like to thank the Oddamavadi Pradeshiya Sabha, and also thank Abdul Baazir and Mohamed Faris, who provided some of the key site images in this article.